சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் முதல் திண்டிவனம் வரை ஸ்மார்ட் தேசிய நெடுஞ்சாலையாக மாற உள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு மிக முக்கிய நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலையை பயன்படுத்தி வருகிறது. இதேபோன்று சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. 

மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும், பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் தாம்பரம் முதல் திண்டிவனம் வரை பெரும்பாலான இடங்களில் மின்விளக்கு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றன. அதாவது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு நெடுஞ்சாலையில் உள்ள தெருவிளக்குகள், பராமரிப்பாளர்களால் பராமரிக்கப்படுகிறது. பல நேரங்களில் உரிய நேரத்தில் தெருவிளக்குகள், ஆன் செய்யப்படுவதில்லை. அதேபோன்று 24 மணி நேரமும் தெருவிளக்கு எரிகின்ற சூழலும் சில நேரங்களில் ஏற்படுகிறது.

தாம்பரம் முதல் திண்டிவனம் வரை, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) இணையத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்படவுள்ள தமிழகத்தின் முதல் நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து சாலை விளக்குகளிலும் சென்சார்கள் பொருத்தப்படும்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரவிருக்கும் புதிய அமைப்பின் கீழ், சென்சார்கள் மற்றும் டைமர்கள் பொருத்தப்படும். சென்சார்கள் மூலம் சூரிய ஒளி எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றார்போல் மின்விளக்குகள் செயல்படும். தற்போது இருக்கும் சூழலில், மின்சாரம் அதிக அளவு வீணாகி வருவதாகவும், இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் மின்சாரம் பெருமளவு சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் மின்விளக்குகள் எரிய விடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் தீர்வாக அமையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

IoT சென்சார்களை பயன்படுத்தி ஆம்புலன்ஸ்கள், ரோந்து வாகனங்கள் மற்றும் மீட்பு கிரேன் வாகனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுகிறது என்றால், எவ்வளவு விரைவாக மீட்பு பணிகள் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை பயன்படுத்தி, எதிர்காலத்தில் சேவைகளை உடனடியாக வழங்க முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜியோ-ஃபென்சிங் மூலம், ரோந்து வாகனங்கள் குறிப்பிட்ட மண்டலங்களுக்குள்ளேயே இருப்பதை உறுதி செய்ய முடியும். ஏதேனும் விதிமிரல்கள் ஏற்பட்டால், அது உடனடியாக எச்சரிக்கை தகவலை அனுப்பி வைக்கும். இது போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI