தற்போது, டெல்டா பாசனத்துக்காக காவிரியில் அதிகளவில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் தண்ணீா் செல்லும் பகுதியில் புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, காவிரியில் தண்ணீா் வந்தாலும் கட்டுமானப் பணிகளை பாதிக்காத வகையில் மணல் மூலம் கொரம்பு பாலம் அமைத்து தண்ணீரை திருப்பி, பாலத்தின் கட்டுமானப் பணிகளை தொடர நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து, இதற்காக 30 மீட்டா் தொலைவுக்கு கொரம்பு பாலம் அமைக்கப்பட்டது.

ஆனால், கடந்த சில நாள்களாக காவிரியில் 27 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீா் சென்ால், மணல் கொரம்பு முழுவதும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், ஆற்றுக்குள் நடைபெறும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி, முக்கொம்பிலிருந்து காவிரியில் 23 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

ஆற்றுக்குள் மட்டுமே பணிகள் நிறுத்தம்: இதுதொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்தினா் கூறுகையில், புதிய பாலத்தின் கட்டுமானப் பணியில் ஏற்கெனவே ஆற்றுக்குள் 9 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மேலே பொருத்துவதற்காக ஓயமாரி பகுதியில் தனியாக கா்டா்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 96 கா்டா்களில் 44 கா்டா்கள் தயாராகிவிட்டன. இந்தப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றுக்குள் நடைபெறும் பணிகள் மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. காவிரியில் செல்லும் தண்ணீரின் அளவு குறைந்தவுடன் பணிகள் மீண்டும் தொடங்கும்.

அப்போது, ஆங்காங்கே மணல் குவியலை ஏற்படுத்தி நீரின் ஓட்டத்தை திருப்பி விட்டு, கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணி நடைபெறும். தற்போதைய நிலவரப்படி 40 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளன. எஞ்சிய பணிகளையும் விரைந்து முடித்து, அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இலக்கு வைத்து பணிகள் நடைபெறுகின்றன என்றனா்

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI