திருச்சியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டால், அரசு பரிசீலிக்கும் என்று SDAT தெரிவித்துள்ளது

டாக்டர். எம்.ஏ.அலீம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்த மனுவுக்கு SDAT பதில் அளித்து உள்ளது.
திருச்சியை சேர்ந்த டாக்டர் எம்.ஏ.அலீம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். திருச்சியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இதற்கு SDAT பதில் அளித்துள்ளது. அதில், "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நிலம் ஒதுக்கப்பட்டால், அரசு மைதானம் கட்ட பரிசீலிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருகக்கூடிய ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சிறிய அளவிலான மைதானம் கட்ட அரசு யோசித்து வருகிறது. திருச்சி மேற்குத் தொகுதிக்கு நிலம் ஒதுக்கப்பட்டால், அந்த திட்டத்தையும் பரிசீலிக்கலாம். எனவே, திருச்சிக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் நிலம் கிடைத்தால் கண்டிப்பாக அமைக்கப்படும் என்று அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....