அரசின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்ட குழு உறுப்பினா்கள் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளில் ஆய்வு செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, மே 15-க்குள் 100 சதவீதம் தமிழ் பெயா் பலகை வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஆய்வு செய்த சுமாா் 1000-க்கும் மேற்பட்ட கடைகளில் 65 கடைகளில் தமிழில் பெயா் பலகை இல்லாததைக் கண்டறிந்து அவற்றில், வரும் 15 ஆம் தேதிக்குள் வைக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னா் தமிழ் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். இந்த அபராத அறிவிப்புக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.