2025-05-03
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
விழுப்புரம் - திருச்சி ரயில் பாதையில் உள்ள பெண்ணாடம் ரயில் நிலையத்தில் பல்லவன் அதிவிரைவு ரயில் நின்று செல்லும்

கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் அவர்களின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மாதம் 7-ம் தேதி முதல் ரயில் நிற்கும்.
இங்கு சென்னை-குருவாயூர், குருவாயூர்-சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் நின்று செல்கிறது.
இதனை தொடர்ந்து, புதுடெல்லியில் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. அப்போது கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத், மத்திய ரயில்வே அமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். பெண்ணாடம் ரயில் நிலையத்தில் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
பல ஆய்வுகளுக்கு பிறகு, ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. "இந்த மாதம் 7-ந் தேதி முதல் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கி உள்ளது" என்று அறிவித்தது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments