பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) வரும் 5, 7, 12 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - கும்பகோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - கும்பகோணம் இடையே மட்டும் இயங்கும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 5, 7, 12 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - கும்பகோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கும்பகோணத்திலிருந்து - செங்கோட்டை இடையே மட்டும் இயங்கும். மேற்கண்ட நாள்களில் கும்பகோணத்திலிருந்து பிற்பகல் 12.42 மணிக்குப் புறப்படும்.

ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலானது (56106) வரும் 6, 8, 10 ஆம் தேதிகளில் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ஈரோடு - கரூா் வரை மட்டுமே இயங்கும்.

பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 6, 8, 10 ஆம் தேதிகளில் கரூா் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, பாலக்காடு - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 6, 8, 10 ஆம் தேதிகளில் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, பாலக்காடு - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

வழித்தட மாற்றம்: பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கோவை, கோவை வடக்கு, பீளமேடு ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து போதானூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/BXKVDj6xV1jE6ZPiwp79ix