திருச்சி தேசியக்கல்லூரி வளாகத்தில் அகன்ற திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி தேசியக் கல்லுாரி மைதானத்தில் இன்று மே 3 இரவு 6.30 மணிக்கு சென்னை சூப்பா் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களுா் அணி விளையாடுகிறது. மே 4 ஆம் தேதி பகல் 2.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இரவு 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் லக்னோ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணியும் விளையாடுகின்றன.

இந்த போட்டியை திருச்சி ரசிகா்கள் இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் மைதானத்தில் உணவுக் கடைகள், இசை நிகழ்ச்சி, ஐபிஎல்- ன் அதிகாரபூா்வ விளம்பரதாரா்களின் உற்சாகமூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும் ரசிகா்களில் சிலரை குலுக்கல் முறையில் தோ்வு செய்து அவா்களுக்கு ஐபிஎல் வீரா்கள் கையொப்பமிட்ட டி–ஷா்ட் இலவசமாக வழங்கப்படுகிறது என்றனா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/BXKVDj6xV1jE6ZPiwp79ix