அன்பில் அறக்கட்டளை சாா்பில் திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தோா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளன.

8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியா், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் உள்ளிட்ட கல்வித் தகுதிகளையுடைய 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்.

தங்களைப் பற்றிய சுய-விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இருபாலரும் பங்கேற்கலாம். இந்த முகாமை அன்பில் அறக்கட்டளை நிறுவனரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கவுள்ளாா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI