திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்கப்படவில்லை என்றும், மேரிஸ் பாலம், ஜங்ஷன் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். மாநகராட்சியை பொருத்தவரை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்தபோது எந்தவித திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. அதன்பிறகு திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 851 கிலோமீட்டர் பாதாள சாக்கடை பணி மற்றும் 75 கிலோமீட்டர் குடிநீர் திட்டம் போன்றவற்றை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தியது. நான்கு ஆண்டுகளில் 2000 கோடிக்கு மேல் வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு உள்ளது. மாரீஸ் பாலம் இடிக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் செய்து வருவதால் தாமதமாகிறது. அதேபோல ஜங்ஷன் பாலமும் ரயில்வே நிர்வாகத்தால் தாமதமாகிறது. பாலக்கரை மற்றும் ராமகிருஷ்ணா பாலத்தை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முயன்ற போது போலீசார் மாரீஸ் பாலபணி முடிந்த பிறகு மேற்கண்ட இரண்டு பாலத்தை சரி செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.நிலைமை இப்படி இருக்க அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவது சரியானது அல்ல. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடைகள் கட்ட மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டி இருப்பதால் தாமதமாகி வருகிறது. என்று தெரிவித்தார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....