சுற்றுலா தலமான புளியஞ்சோலைக்கு செல்லும் சாலையானது விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தகவல்

திருச்சி துறையூர்-புளியஞ்சோலை சாலை மற்றும் முசிறி-துறையூர்-ஆத்தூர் சாலை சந்திப்பில் மேம்பாடு செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புளியஞ்சோலைக்கு பாதுகாப்பான வழியை ஏற்படுத்த முடியும். இதற்காக ரூ.92 லட்சம் மதிப்பிலான திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாலை விபத்துகளை தடுக்க முடியும்.
இந்த சாலை மேம்பாட்டு திட்டத்தை இறுதி செய்ய மூத்த அதிகாரிகள் அங்கு சென்று இடத்தை ஆய்வு செய்தனர். முசிறி-தாத்தையங்கார்பேட்டை-எறகுடி-முருகூர் சாலை, SH 30 ஐ சந்திக்கும் இடத்தில், இருபுறமும் 150 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படும். இந்த சந்திப்பு இரண்டு மீட்டர் வரை விரிவாக்கம் செய்யப்படும். மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஒரு சென்டர் மீடியன் அமைக்கப்படும்.
இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தேவையில்லை. ஏனென்றால் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலமே பயன்படுத்தப்படும். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட புதிய வழிகாட்டி பலகைகள் நிறுவப்படும். இந்த பணிகள் மூன்று மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....