திருச்சி மாவட்டத்தில் 30 தெருக்களில் சாதி பெயர்களை கொண்டுள்ளது. இதனை மாற்ற விரைவில் மன்றம் தீர்மானம் நிறைவேற்றும் என்று திருச்சி மாநகராட்சியின் மேயர் அன்பழகன் தெரிவித்தார். 

65 வார்டுகளைக் கொண்ட இந்த நகரத்தில், ஒரு வார்டுக்கு சுமார் 20 முதல் 122 தெருக்கள் வரை உள்ளன. இதில் குறைந்தது 30 முக்கிய தெருக்கள் சாதிப் பெயர்களைக் கொண்டுள்ளன. கள்ளர் தெரு, குறவர் தெரு, அருந்ததியர் நகர், வெள்ளாளர் தெரு, முஸ்லிம் தெரு, பள்ளர் தெரு, சௌராஷ்டிரா தெரு ஆகியவை அவற்றில் சில. பிற்படுத்தப்பட்ட அல்லது முன்னேறிய வகுப்பினர் பெயர்களில் தெருக்கள் இருப்பது குறித்து பெரிய எதிர்ப்பு இல்லை. ஆனால் SC / ST பெயர்களைக் கொண்ட தெருக்களில் வசிப்பவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

"சாதி அடிப்படையிலான தெரு பெயர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்து, அதை நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பி அவர்களின் ஒப்புதலைப் பெறுவோம். நகராட்சி நிர்வாக அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பெயர் மாற்றங்களுக்கான தீர்மானத்தை மன்றம் நிறைவேற்றும்" என்று திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தெரிவித்தார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/H2PLnAGl3w3437Oj7T2VJq