இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா்-கொரடாச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி-காரைக்கால் டெமு ரயிலானது (76820) ஏப்ரல் 29, 30, மே 1-ஆம் தேதிகளில் தஞ்சாவூா்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி-தஞ்சாவூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால்-திருச்சி டெமு ரயிலானது (76819) ஏப். 29, 30, மே 1-ஆம் தேதிகளில் காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா்-திருச்சி இடையே மட்டும் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/BXKVDj6xV1jE6ZPiwp79ix