சிவாஜி கணேசன் சிலை வில்லியம்ஸ் சாலைக்கு மாற்றம்

பாலக்கரை ரவுண்டானா புதுப்பிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலக்கரை ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா புதுப்பிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக சிலை மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது அடி உயரமுள்ள இந்த சிலை 2011ல் பொதுமக்களின் பணத்தில் நிறுவப்பட்டது. ஆனால், இதுவரை அந்த சிலையானது திறக்கப்படவில்லை. 2011ல் நடந்த மாநில சட்டசபை தேர்தல் காரணமாக திறப்பு விழா தள்ளிப்போனது. பிறகு பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டது.
சமீபத்தில், திருச்சி மாநகராட்சி சிலையை வார்னர்ஸ் சாலை - வில்லியம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள சோனா மீனா தியேட்டர் அருகே மாற்ற முடிவு செய்துள்ளது. அங்கு நீரூற்றுடன் கூடிய ஒரு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் சிவாஜி கணேசன் சிலை நிறுவப்படும். அடுத்த மாதம் மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. சிலையை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாலக்கரை ரவுண்டானாவை விட இங்கு வாகன போக்குவரத்து குறைவு. இதனாலேயே இந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் .
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....