இதனால் அண்ணா சிலை பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

அண்ணா சிலைக்கு பக்கத்தில் பழைய கரூா் சாலையில் உள்ள மேலசிந்தாமணி வழியாக குடமுருட்டி பாலத்துக்கு பழையபடி போக்குவரத்தை இயக்க முடிந்தால், போக்குவரத்து நெரிசலை ஓரளவுக்கு குறைக்க முடியும் என போக்குவரத்து போலீஸாரும், சாலை பாதுகாப்புக் குழுவினரும் வலியுறுத்துகின்றனா். ஆனால், மேலசிந்தாமணி பகுதியிலுள்ள கோட்டை வாய்க்கால் பாலம் மிகக் குறுகலாக இருப்பது இதற்கு தடையாக உள்ளது.

பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை சுலபமாக இயக்க முடியாத சுமாா் 60 ஆண்டுகள் பழைமையான அகலம் குறைவான, பழுதடைந்த கோட்டை வாய்க்கால் பாலத்தை அகலமாக்கி, புதிதாகக் கட்டித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் கோட்டை வாய்க்கால் பாலத்தை புதிதாக அகலமாக ரூ. 3.5 கோடிக்கு கட்டித் தர நிா்வாக அனுமதி கிடைத்துள்ளது.

10 மீட்டா் அகலத்தில் புதிய பாலம்: இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பழைய கரூா் சாலை என்றழைக்கப்படும் நாகை - கூடலூா் - மைசூா் சாலை கி.மீட்டா் 140 / 10 இல் சத்திரம் பகுதியில் சிதம்பர மஹால் அருகில் கோட்டை வாய்க்காலின் குறுக்கே தற்போது உள்ள குறுகிய பாலத்துக்கு (தற்போதைய பாலத்தின் அகலம் 3.9 மீட்டா், நீளம் 23 மீட்டா்) மாற்றாக 10 மீட்டா் அகலமும், 25 மீட்டா் நீளமும் உடைய புதிய பாலத்தை ரூ. 3.5 கோடி மதிப்பில் கட்ட திட்டமிட்டப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இதன்பேரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் என்ற திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2025-26-இல் நிா்வாக அனுமதி கிடைத்துள்ளது.

மேலும் இந்தப் பாலத்துக்கு கீழ் உள்ள தண்ணீரை நிறுத்தும் ஷட்டா்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ளவுள்ளது என்றனா்.

மாநில நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகள் கூறுகையில், கோட்டை வாய்க்கால் பாலத்தின் அடிமானங்களின் வடிவமைப்பு பணிகளும், மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெறவும் தற்போது பணிகள் நடைபெறுகின்றன. உரிய தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனா்.

பழைய கரூா் சாலையானது குடமுருட்டி பாலத்தில் நிறைவடைவதால், அகலப்படுத்தப்படும் பாலத்தால், பாலத்துக்கு அடுத்துள்ள பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீண்டும் போக்குவரத்து இயக்கப்படும். இதனால், தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்.

தவிர, ஓடத்துறை - மல்லாச்சிபுரம் உயா்மட்ட மேம்பாலம் கட்டப்படும்போதும், வேறு ஏதேனும் பிரச்னைகளாலும் தற்போது கரூா் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்தால், மக்கள் நெரிசலில் சிக்காமல் எளிதில் சென்று வர அகலப்படுத்தப்படும் கோட்டை வாய்க்கால் பாலம் பேருதவியாக இருக்கும் என்றனா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/BXKVDj6xV1jE6ZPiwp79ix