பஞ்சப்பூரை சுற்றியுள்ள நிலத்தோட மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு திட்டங்கள் வருகிறது. இதனால் பலரும் ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளது.

திருச்சி திருமலைசமுத்திரம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்தை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கு 2 ஏக்கரில் மியாவாக்கி முறையில் அடர்த்தியான காடுகளை உருவாக்கும் திட்டத்துடன் 25,000 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அதுவும் சாதாரணமாக இல்லை, மியாவாக்கி முறையில அடர்த்தியான காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

பஞ்சப்பூரில் வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் அருகில் இந்த நிலம் இருக்கிறது. இந்த இடத்தை மறுபடியும் யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவும், பசுமையை அதிகரிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும் போது, "திருமலைசமுத்திரம் கிராமத்துல கிட்டத்தட்ட 14 ஏக்கர் அரசு நிலத்தை சில பேர் ஆக்கிரமிச்சு இருந்தாங்க. சட்டப்படி எல்லா தடைகளையும் தாண்டி, நீதிமன்ற உத்தரவுப்படி, ஸ்ரீரங்கம் வருவாய் அதிகாரிகள் 10 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளனர். மீட்ட நிலத்தை பாதுகாக்கவும், பசுமையை அதிகரிக்கவும் 2 ஏக்கரில் 25,000 நாட்டு மரக்கன்றுகளை நட திட்டமிட்டு உள்ளனர். திருச்சியை சேர்ந்த தொழில் முனைவோர் CSR நிதியுதவி செய்துள்ளனர்.

இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் S வைத்தியநாதன் கூறியதாவது:- சுமார் 27 வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்படும். போர்வெல் வசதி இருக்கு. மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மரக்கன்றுகள் நல்லா வளரும்.

வேம்பு, மருதம், மகிழம், பாதாம், நாவல் போன்ற மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. திருச்சி நகரத்துக்கு வெளியில இருக்கிற பஞ்சப்பூர்ல இருந்து ஒலையூர் வரைக்கும் நிறைய அரசு மற்றும் தனியார் முதலீடுகள் வரப்போகுது. அதனால காற்று மாசுபாடு அதிகமாகும். அத கட்டுப்படுத்த மரங்கள் நடறது ரொம்ப முக்கியம்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு, அங்க மரங்களை நட்டு பசுமையை அதிகரிக்க அதிகாரிகள் முயற்சி செய்வது எதிர்காலத்துல காற்று மாசுபாடு பிரச்சினைய சமாளிக்க இது ரொம்ப உதவியா இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/BXKVDj6xV1jE6ZPiwp79ix