ராக்கெட் ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் முதல் பிளாட்பாரத்திற்கு வரவும், சோழன் எக்ஸ்பிரஸ் திருவெறும்பூரில் நிற்கவும் துரை வைகோ வலியுறுத்தல்!

இது தொடர்பாக திருச்சி எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: -
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கியமான ரயில்களை பிளாட்பார்ம் 1-க்கு மாற்றும்படி கேட்டுள்ளோம். ஏனெனில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மற்ற பிளாட்பார்ம்களுக்குச் செல்ல சிரமப்படுகிறார்கள்.
சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவெறும்பூரில் நிறுத்தவும் கோரிக்கை வைத்தேன். அவர்கள் பரிசீலிக்க ஒப்புக்கொண்டனர்," என்று அவர் தெரிவித்தார். ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை மற்ற ஊர்களுக்கும் நீட்டிக்க முடியுமா என்ற கேள்விக்கு, திருச்சிக்கு அதிக ரயில்கள் வந்த பிறகு பரிசீலிக்கலாம் என்று அவர் பதிலளித்தார்.
ரயில்வே கிராசிங்குகளில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதாகவும், திருச்சி - திருப்பதி ரயில் சேவை பற்றியும் நினைவுபடுத்தியதாகவும் அவர் கூறினார். திருச்சி மற்றும் பெங்களூரு இடையே ஒரு இன்டர்சிட்டி ரயில் விட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....