பெப்ஸிகோ நிறுவனம் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் 28 ஏக்கர் நிலத்தில் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் SIPCOT தொழிற்பூங்காவில் 28 ஏக்கர் நிலத்தில் இந்த ஆலை அமையவுள்ளது. இங்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் உட்பட பல தின்பண்டங்கள் தயாரிக்கப்படும். தமிழக அரசு மணப்பாறையை உணவுப் பூங்காவாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே JABIL போன்ற பெரிய நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய உள்ளன. பெப்சிகோவின் இந்த விரிவாக்கம், தின்பண்ட உற்பத்தி திறனை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
பெப்சிகோ இந்தியா தனது தின்பண்ட உற்பத்தி திறனை அதிகரிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. "தின்பண்ட உற்பத்தி திறனை அதிகரிக்கவே இந்த விரிவாக்கம்" என்று பெப்சிகோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்சிகோ மட்டுமல்லாமல், ஆப்பிள், சிஸ்கோ மற்றும் HP போன்ற நிறுவனங்களுக்கு முக்கியமான சப்ளையரான JABIL நிறுவனமும் மணப்பாறையில் ஒரு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இதற்காக ரூ.2,000 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு செப்டம்பர் 2024-ல் மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மணப்பாறை ஒரு முக்கிய தொழில் மையமாக மாற வாய்ப்புள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....