திருச்சி பட்ஜெட் 2025- 2026

திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1. நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன தெருவிளக்குகள் (Heritage Lamps) ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
2. வெஸ்ட்ரி பள்ளி அருகிலும், அலெக்சாண்டிரியா சாலையிலும் சாலையோர பூங்காக்கள் தலா ரூ.1 கோடி செலவில் அமைக்கப்படும்.
3. ஒவ்வொரு கோட்டத்திலும் உணவுத் தெரு (Food Street) தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
4. வெள்ள பாதுகாப்புக்காக வெள்ள அபாயமுள்ள 5 இடங்களில் உந்து நிலையங்கள் தலா ரூ.2 கோடி வீதம் கட்டப்படும்.
5. விடுபட்ட தெருக்களுக்கு தெருப்பெயர் பலகைகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வைக்கப்படும்.
6. அனைத்து சாலைகளிலும் உள்ள சாலை மையத் தடுப்பு சுவர்கள் மற்றும் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படும்.
7. சாலை சந்திப்புகளில் ஒளிரும் சாலை ஸ்டட்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
8. ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளில் வெளிச்சம் குறைவாக உள்ள 20 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளை அகற்றிவிட்டு, புதிதாக 4000 எண்கள் 40 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளாக மாற்றுவதற்கு ரூ.2 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டங்கள் அனைத்தையும் நகர்ப்புற அமைச்சர் கே.என். நேரு அவர்களின் மூலம் அரசிடம் உரிய நிதியுதவி பெற்று மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சப்பூர் பகுதியில் சுமார் ரூ.115 கோடி மதிப்பீட்டில் 19.20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேயர் அன்பழகன் தெரிவித்தார்
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....