திருச்சி டிமார்ட் வயலூர் கிளை விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு!

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே டிமார்ட் கிளை திறக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதுமட்டுமல்லாமல் டிமார்ட் இணையதளம் மூலமாகவும் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பால்பண்ணை மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் டிமார்ட் கிளையானது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் 3-வது கிளையாக வயலூர் சாலையில் நாச்சிக்குறிச்சியில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருவதால் இந்த டிமார்ட் கிளையானது 3-5 மாதங்களில் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்று அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டிமார்ட் கிளை எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் திறக்கப்படும் என்று தெரிகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....