திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. TNPSC, SSC, RRB, LIC AAO, IB, EPFO, ASST, COMMANDANT போன்ற போட்டி தேர்வுகளுக்கு வரலாறு, புவியியல், பொருளாதாரம், அறிவியல், அரசியல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், நுண்ணறிவு, திறனறிவு, காரணவியல் மொழியறிவு (தமிழ்/ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 28.07.2025 அன்று இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இங்கு, சிறந்த பயிற்றுநர்களை கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். ஆகவே, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI