திருச்சி விமான நிலையம், சர்வதேச விமான நிலையங்களின் தரவரிசை பட்டியலில், இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச அளவில், விமான நிலையங்களில் பயணியருக்கான சேவைகளின் தரம் குறித்து, சர்வதேச விமான நிலைய கவுன்சில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, விமான நிலையங்களில் ஆய்வு நடத்தி, தரத்தை மதிப்பீடு செய்யும்.
கடந்த ஜன., முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில், அந்த கவுன்சில் விமான நிலையங்களில் ஆய்வு செய்து, காலாண்டுக்கான தரவரிசை பட்டியலைவெளியிட்டுள்ளது.
இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை உள்ளடக்கிய பசிபிக் பகுதியில் உள்ள விமான நிலையங்களின் தர வரிசை பட்டியலில், திருச்சி விமான நிலையம், 4.94 புள்ளிகள் பெற்று, சர்வதேச அளவில், 54வது இடத்தையும், இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
கோவா, கொல்கத்தா, இந்துார், புனே விமான நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில், சென்னை விமான நிலையம், 4.90 புள்ளிகளுடன் இந்திய அளவில், 7வது இடத்தை பிடித்துள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....