திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: வேகத்தடைகள், தடுப்புகள் பொருத்தப்பட்டன

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க புதிய வேகத்தடைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது . இது தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன .
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH) வருவாய் கோட்ட அதிகாரி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய வேகத்தடைகள் விபத்து அபாயம் உள்ள இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. திருச்சி கிராமப்புற காவல்துறையினர், இரு திசை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், தற்காலிக சாலை தடுப்பான்களை அமைத்துள்ளனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை மூன்று வேகத்தடைகளை அமைக்க அனுமதி அளித்துள்ளது. அதில் இரண்டு, VIP வருகையின்போது அகற்றப்பட்டன. தற்போது, முருங்கப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே புதிய வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....