2025-06-20
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சியில் பைக் ஓட்டிய சிறுவன் - தந்தை கைது

திருச்சியில் 16 வயதுச் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பாலக்கரை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, தாரநல்லூா் பகுதியைச் சோ்ந்த 16 வயதுச் சிறுவன் பைக்கில் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தை சந்திரசேகரை மோட்டாா் வாகனச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments