முதற்கட்டமாக 15 வழித்தடங்களில் மின் பேருந்துகளின் சேவையானது தொடங்கப்பட்டு உள்ளது. 

"புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 15 மினி பஸ் அனுமதிகளில், ஐந்து மணப்பாறை பகுதியில் புதிய வழித்தடங்களில் இயக்கப்படும். மேலும் பத்து அனுமதிகள் ஏற்கனவே உள்ள மினி பஸ் வழித்தடங்களை விரிவாக்கம் செய்து, பேருந்து வசதி இல்லாத பகுதிகளுக்கும் இயக்கப்படும்" என்று திருச்சி RTO அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 157 மினி பஸ் வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சில திருச்சி நகரத்திலும் உள்ளன. காந்தி மார்க்கெட்டில் இருந்து முக்கொம்புக்கும், மாத்தூர் ரவுண்டானாவில் இருந்து MIET பஸ் ஸ்டாப்பிற்கும், ஸ்ரீரங்கம் STEM பூங்காவில் இருந்து மேல சிந்தாமணிக்கும் புதிய மினி பஸ் வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI