இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழூா் இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 4 முதல் 8 ஆம் தேதி வரை காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூரிலிருந்து மாலை 4.15 க்குப் புறப்படும்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/H2PLnAGl3w3437Oj7T2VJq