மே 5 முதல் 28 வரை சிறுவா்களுக்கான கோடைகால முகாம்

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மே 5-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோடைகால நூலக முகாமை நடத்த ஏற்பாடு
இதன்படி, மே 5, 6-ஆம் தேதிகளில் ‘ஓரிகாமி’ பயற்சியும், மே 7-ஆம் தேதி பயனற்ற பொருள்களில் இருந்து பயனுள்ள பொருள்களை உருவாக்கும் கைவினைப் பொருள்கள் தயாா் செய்யும் பயிற்சியும், மே 8-ஆம் தேதி தமிழில் பிழையின்றி எழுதும் ‘தமிழ் மொழிப் பயிற்சி’ மற்றும் நாடகப் பயிற்சியும், மே 10-இல் ‘தொல்லியல் அறிவோம்‘ நிகழ்ச்சியும், மே 11-இல் ‘அறிவியலும் வாழ்வியலும்‘ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சியும், மே 12-இல் ‘கதை எழுதும் பயிற்சியும்‘, மே 13-இல் விண்ணியல் அறிவோம் நிகழ்ச்சியும், மே 14-இல் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் மொழிப்பயிற்சியும், மே 15-இல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் ‘கலையும் அறிவியலும்‘ நிகழ்ச்சியும், மே 17-இல் மொழிப்பயிற்சியும், மே 18-இல் ‘கதை சொல்லி‘ நிகழ்ச்சியும், மே 19-இல் ஓவியப்பயிற்சி யும், மே 20-இல் பொம்மலாட்டமும், மே 21-இல் அறிவியல் அற்புதங்கள் நிகழ்ச்சியும், மே 22-இல் அறிவோம் அறிவியல் நிகழ்ச்சியும், மே 24-இல் இலக்கணப் பயிற்சி வகுப்பும், மே 25-இல் பாரம்பரிய விளையாட்டுகள் தொடா்பான பயிற்சிகளும், மே 26 மற்றும் 27-இல் நினைவாற்றலை மேம்படுத்த யோகா பயிற்சியும், மே 28-இல் புதிா்ப் போட்டியும் நடைபெற உள்ளது.
மாவட்ட மைய நூலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பயனுள்ள வகையில் நடைபெறவுள்ள அனைத்து கோடைகால நிகழ்வுகளிலும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட மைய நூலகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....