திருச்சி மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மாநகர மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருச்சி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை  ஒப்படைக்க தீர்மானம்  உள்ளிட்ட 40 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சுமார் 15 ஆண்டு காலத்திற்கு பராமரிப்பு பணியினை மேற்கொள்ளவும், பேருந்து முனையத்தை முறையாக இயக்கவும் நகராட்சி நிர்வாக இயக்குனரின் நிர்வாக அனுமதி பெறுவதற்கு கருத்துரு அனுப்பி வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு கலைஞரின் பெயரையும், லாரி முனையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும், அதன் அருகே அமையவுள்ள சந்தைக்கு தந்தை பெரியார் பெயரையும் வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. 

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை திறம்பட பராமரிக்க போதிய பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் மாநகராட்சியிடம் இல்லை. எனவே, தனியார் மூலம் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து நிலையம் சரியான முறையில் பராமரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு இரண்டு தளங்கள் உள்ளன. இரண்டு தளங்களையும் இணைக்க 12 லிஃப்ட் வசதிகள் உள்ளன. எனவே, தனியார் மூலம் பராமரித்தால், அனைத்து வசதிகளும் சரியாக செயல்படும்.  திருச்சி மாநகராட்சி தயாரித்த சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திற்கு (TNIDB) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/BXKVDj6xV1jE6ZPiwp79ix