பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது

பஞ்சப்பூரில் கிளாம்பாக்கத்திற்கு இணையாக பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து பஞ்சப்பூர் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மட்டுமல்லாது சோலார் திட்டங்கள், சரக்கு வாகன நிறுத்த முனையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், சரக்கு வாகன நிறுத்த முனையம், சோலார் திட்டங்கள் ஆகியவற்றோடு திருச்சி டைடல் பார்க்கும் பஞ்சப்பூரில் தான் அமைய இருக்கிறது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், எஸ்கலேட்டர், லிஃப்ட், ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்விடம், உணவகம், கழிவறை, 24 மணி நேர கண்காணிப்பு, உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிக, புல்வெளி, பூங்கா, நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
வரும் மே மாதம் ஒன்பதாம் தேதி இந்த புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் திறந்து வைக்கிறார். இந்த நிலையில் தற்போது பணிகள் 99 சதவீதம் நிலையில் ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த பணிகள் குறித்து தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கேஎன் நேரு இன்று ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். மேலும் மிச்சம் இருக்கும் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விரைவில் அந்த பணிகள் நிறைவடைந்து விடுமெனவும் மே ஒன்பதாம் தேதி திட்டமிட்டபடி பேருந்து நிலையம் திறக்கப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர் கேஎன் நேரு. மேலும் தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....