பிசியோதெரபி செய்வதாக கூறி தாலிச்செயின் திருட்டு!

திருச்சி வரகனேரி பகுதியை தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலமேரி உடல்நிலை சரியில்லாமல் திருச்சி இ. பி. ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருக்கு பிசியோதெரபி செய்வதற்காக மருத்துவமனையில் இருந்து நர்ஸ் ஒருவர் அடிக்கடி ராஜமாணிக்கத்தின் வீட்டிற்கு வந்து செல்வார்.
அந்த வகையில் 2 நாள்களுக்கு முன்பு, அவரது வீட்டுக்கு வந்த பெண் ஒருவா், குறிப்பிட்ட அந்த மருத்துவமனையிலிருந்து வந்த செவிலியா் என கூறினாராம்.
இதை நம்பிய அஞ்சலமேரி அவரை வீட்டுக்குள் அழைத்து சென்றாா். சிகிச்சை மேற்கொள்ள கழுத்தில் நகைகள் ஏதும் இருக்கக் கூடாது என அந்தப் பெண் கூறினாராம். இதனால், அஞ்சலமேரி கழுத்தில் கிடந்த நகையை கழட்டி அருகில் வைத்துள்ளாா். சிகிச்சை அளித்த அந்த பெண் புறப்பட்டுச் சென்ற சிறிதுநேரம் கழித்து பாா்த்தபோது, கழட்டி வைத்த நகையைக் காணவில்லையாம்.
புகாரின்பேரில் காந்திச்சந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், செவிலியா் பெயரில் வந்து நகையைத் திருடி சென்றது, திருச்சி உறையூா் கீழ பாண்டமங்கலத்தை சோ்ந்த சாா்லின் மேரி (35) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....