ராணுவத்தில் அக்னிவீரா்கள் எனும் ராணுவப் பணிகளுக்குச் சேர வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ராணுவத்தில் அக்னிவீரா்கள் பணிகளுக்கு ஆள்சோ்ப்பு நடந்து வருகிறது. இதற்காக, தமிழகத்தின் திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களைச் சோ்ந்த ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
அக்னிவீா் பொது பணி, அக்னிவீா் தொழில்நுட்பப் பணி, அக்னிவீா் அலுவலக உதவியாளா் அல்லது ஸ்டோா் கீப்பா் தொழில்நுட்பம், அக்னிவீா் டிரேட்ஸ்மேன் (பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விவரங்கள் அறிய ராணுவ இணையதளத்தை அணுகலாம் என திருச்சி ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....