திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடியே 1.22 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் நூதனமாக வைத்து கடத்தப்பட்டு வந்த ரூ. 1.22 கோடி மதிப்பிலான 1.39 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று வரும் வகையில், திருச்சியில் இருந்து பல்வேறு விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த விமானங்கள் மூலமாக வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும்போது தங்கங்களை கடத்தி வருகின்றனர். தங்கம் விலை வெளிநாடுகளில் குறைவு என்பதால் கிலோ கணக்கிலான தங்கங்களை நூதன முறையில் கடத்தி வருகின்றனர்.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு தங்கத்தை கடத்தி வருவோர் சுங்கத் துறை அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில், சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் நூதனமாக வைத்து கடத்தப்பட்டு வந்த ரூ. 1.22 கோடி மதிப்பிலான 1.39 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜாவில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பயணி ஒருவரின் நடவடிக்கை இருந்துள்ளது.
இதையடுத்து, அந்தப் பயணியை சுங்கத் துறை அதிகாரிகள் தனியே அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது உடைமையில் ஐஸ் உடைக்கும் இயந்திரம் ஒன்று இருந்துள்ளது. அந்த உடைமையை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் தங்கம் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த இயந்திரத்தில் 1.39 கிலோ எடை கொண்ட ரூ. 1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்தப் பயணியிடமிருந்து சுங்கத் துறை அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....